ஹிண்ராப்ட் இயக்கத்தின் எழுச்சியும் இலக்கும்
兴权会运动的崛起和走向
兴权会运动的崛起和走向
எழுத்தாளர் | : | ஞாம் கீ ஹான் |
மொழிப் பெயர்ப்பாளர் | : | ரவி சர்மா |
【《人民之友》编者按语】这篇《兴权会运动的崛起和走向》是人民之友工委严居汉为了配合工委会今年的其中一个工作重点——继续推动跨族群工作,反对巫统种族主义霸权,争取民族平等,而特地撰写的一篇题为《兴权会运动是马来西亚印裔族群在现阶段的民主改革运动的产物》工作论文的最后两个部分即“兴权会运动的崛起”与“总结”。全文篇幅略长,由以下6个部分组成:
(一)印度人迁移到马来亚的背景简述;
(二)英殖民统治者输入印度劳工的两项奴役制度;
(三)印裔族群的政治觉悟;
(四)国家种族主义政策对印裔族群的影响;
(五)兴权会运动的崛起;
(六)总结。
《人民之友》部落格于今年2月21日与3月10日先后发表了严居汉所撰写的这篇文章的华文与巫文的全文内容。这篇工作论文引起了许多关心马来西亚印裔族群的困境的各族人士的关注。《兴权会网站》随后上载了这篇文章的第五个部分即“兴权会运动的崛起”和原来全文的“编者按语”,并链接到《人民之友》部落格的华文与巫文版的全文内容。这篇文章的内容和观点引起了许多印裔领袖和印裔群众的赞赏。
在这篇工作论文发表之后,人民之友部分工委(包括作者严居汉)通过新加坡好友庄明湖的安排,约见了一名曾经跟随父母在马来亚(包括新加坡)民族民主运动作出不少贡献,并精通华文、英文与淡米尔文的现年61岁的印裔商人拉维沙尔玛(Ravi Sarma),就马来西亚印裔族群的问题进行坦率深入的交流。拉维在这次会谈时得知《人民之友》想找一名精通淡米尔文并愿意翻译严居汉的这篇工作论文成淡米尔文的热心人士却难以如愿的情况下,欣然接受了《人民之友》编辑部的请求,根据华文版的原文文稿,将《兴权会网站》所上载的第五个部分即“兴权会运动的崛起”内容翻译成淡米尔文。拉维最后也将论文的最后部分即“总结”一并翻译出来。
拉维花了许多宝贵的时间和精力,非常热情和认真解读了这篇工作论文的内容,也非常熟练和巧妙地运用了淡米尔群众所能掌握的语文进行这项翻译,他因不熟悉淡米尔文电脑输入,为了妥善完成这项翻译工作而亲自誊写了51页的翻译手稿并及时送交《人民之友》编辑部,拉维的这种为人民服务的精神是令人赞赏的。《人民之友》编辑部和人民之友工委会非常感激拉维为翻译严居汉这篇工作论文的最后两个部分成淡米尔文所作的努力和贡献。《人民之友》编辑部和人民之友工委会也非常感谢我们的战友莫汉( Mohan A/L Periyasamy)和珊塔(Santha Letchmy A/P Perumal)协助将拉维的手稿制成电子文档所作的努力和贡献。
根据拉维的反映,他的已故父亲P V 沙尔玛(P V Sarma)曾是马来亚民主同盟、马来亚抗英同盟以及马来亚民族解放同盟的领导人;他的母亲沙拉达沙尔玛(Sarada Sarma),是出身于印度著名的 Annamalai大学、精通淡米尔语文,曾为上个世纪的中国的淡米尔语文的国际广播和文化教育作出不少贡献的知识份子。作为上世纪马来亚(包括新加坡)民族民主运动先行者的后裔,而今已逾花甲之年的拉维,依然寻求其88岁高龄母亲的关怀协助,来完成这项翻译工作。拉维的这种义不容辞和谦虚谨慎的态度是值得学习的。人民之友工委会因此诚恳邀请拉维携带其家眷与母亲,出席人民之友即将在9月6日(星期日)在柔佛古来福临门酒家举行的第14周年纪念活动(“马来西亚民主改革的新阶段”论坛与午宴),在午宴时段讲述他接受我们的邀请而翻译严居汉论文中的关于“兴权会运动的崛起”和“总结”的两个部分为淡米尔文的感受和意见,跟与会者交流。
[‘சஹாபாட் ரக்யாட்’ -ன் ஆசிரியர் விளக்கக் குறிப்பு ] ‘ஹிண்ராப்ட் இயக்கத்தின் எழுச்சியும் இலக்கும்’ எனும் தலைப்பிலான இந்தக் கட்டுரை, ‘சஹாபாட் ரக்யாட்’ செயற்குழுவினரில் ஒருவரான, ஞாம் கீ ஹானின் ‘ஹிண்ராப்ட் இயக்கமானது, மலேசிய இந்திய சமூகத்தின் தற்போதைய ஜனநாயக செயற்பாட்டின் விளைவே’ எனும் ஆய்வுக் கட்டுரையின் கடைசி 2 பகுதிகளாகும். இந்த ஆய்வுக் கட்டுரையானது, ‘சஹாபாட் ரக்யாட்’ –ன் இவ்வாண்டின் முகான்மை பணியான ‘இன எல்லைகளைக் கடந்து பணி தொடர, சர்ச்சைக்குரிய அம்னோ இனவாதம் மற்றும் மேலாதிக்கத்தை எதிர்த்தல், மற்றும் தேசிய இனங்களுக்கிடையேயான சம உரிமைக்காகப் போராடுதல்’ எனும் கொள்கைகளுடன் ஒத்துப்போய் உள்ளது. இதன் மூல உரையானது, சற்று நீண்ட, 6 பகுதிகளைக் கொண்டது. அவை :-
1) மலாயாவிற்கு புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினரின் வரலாறு
2) இந்தியர்களை மலாயாவுக்குக் கொண்டுவர, பிரிட்டிஸ் காலனித்து ஆட்சியாளர்கள் மேற்கொண்ட 2 வகையான அடிமை முறைகள்
3) இந்திய சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வு
4) நாட்டின் தேசிய இனவாதக் கொள்கை இந்தியர்களின் மீது ஏற்படுத்திய தாக்கம்
5) ஹிண்ராப்ட் இயக்கத்தின் எழுச்சி
6) முடிவுரை
‘சஹாபாட் ரக்யாட்’ வலைப்பதிவில், இந்த ஆய்வுக்கட்டுரை மெண்டரின் மற்றும் மலாய் மொழியில் முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை பல்லின மக்களின், குறிப்பாக மலேசிய இந்திய சமூகத்தின் பால் அக்கரை கொண்டவர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இக்கட்டுரையின் பகுதி 5 ஹிண்ராப்ட் வலைதளத்திலும் பிரசுரிக்கப்பட்டு; இந்திய சமூகம் மற்றும் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்றது.
இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்ட பிறகு, ஞாம் கீ ஹான் மற்றும் ‘சஹாபாட் ரக்யாட்’ உறுப்பினர்கள், மெண்டரின், ஆங்கிலம் மற்றும் தமிழில் பாண்டித்தியம் பெற்ற, 61 வயதான ரவி சர்மா அவர்களை சந்தித்து; மலேசிய இந்தியர்கள் குறித்து கலந்துரையாடியது. மாலாயா தேசிய ஜனநாயக இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட தம் பெற்றோரைப் போல், இவரும் சேவையாற்றியுள்ளதால், எங்களின் வேண்டுகோளை ஏற்று; இப்பதிவின் 5-ம் பகுதியைத் தமிழில் மொழி பெயர்க்க ஒத்துக்கொண்டார்.
தோழர் ரவி தமது நேரத்தின் பெரும் பகுதியை, இந்த மொழி பெயர்ப்பிற்காக செலவிட்டுள்ளார். இதனை வாசிப்பவர்கள் இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் இதனை எழுதியுள்ளார். தோழர் ரவி சர்மா அவர்களின் பாராட்டுக்குரிய பணிக்கு ‘சஹாபாட் ரக்யாட்’ செயற்குழு தன் சிரம்தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறது. கணினியில், தமிழில் தட்டச்சு செய்வதில் பழக்கம் இல்லாததால், 51 பக்கங்களில் அவர் எழுதித்தந்த படிவத்தை தோழர் மோகன் பெரியசாமி மற்றும் சாந்தலட்சுமி பெருமாள் இருவரும் கணினியில் தட்டச்சு செய்துகொடுக்க உதவினர். இத்தருணதில் அவர்களுக்கும் எமது நன்றி.
தோழர் ரவியின் கூற்றுப்படி, அவரின் தந்தையார் பிவி சர்மா மலாயா ஜனநாயக ஒன்றியம், சிங்கப்பூர் மக்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு லீக் மற்றும் மலாயா தேசிய விடுதலை லீக் ஆகியவற்றில் தலைமை பொறுப்பில் இருந்துள்ளார். அவரின் தாயார் சாரதா சர்மா, இந்தியாவில் பிரசித்தி பெற்ற அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயின்றவர்; தமிழில் சரளமாக புலங்குபவர். சீனாவின் சர்வதேச வானொலியில் தமிழ் மொழி, கல்வி மற்றும் பண்பாடு நிகழ்வுகளை தொகுத்து வழங்கியவர். இந்த மொழிபெயர்ப்பிற்கு, 88 வயதான தம் தாயார் திருமதி சாரதா சர்மாவின் உதவியையும் தோழர்ரவி நாடியதாகக் குறிப்பிட்டார்.
தோழர் ரவியின் சீரிய பணியை சிறப்பிக்கும் வகையில், ‘சஹாபாட் ரக்யாட்’ தனது 14-வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு அவர்தம் குடும்பத்தினரை அழைத்துள்ளது. இந்நிகழ்வானது செப்டம்பர் 6, 2015-ல், கூலாய் ஜெயாவில் ‘மலேசியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியின் புதிய கட்டம்’ எனும் கருப்பொருளுடன் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு, இம்மொழிபெயர்ப்பின் போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்வார்.
【作者简介】
严居汉,1983年出生于马来西亚瓜拉登嘉楼,2007年在马来西亚工艺大学(UTM)产业管理系毕业之后就投身非政府组织的工作;2009年接受笨珍培群独中校长张济作邀请,担任课外活动处主任,想为独中教育作出点滴贡献,但结果事与愿违;2011年任满之后离开培群独中,进入马来西亚国民大学(UKM),攻读人类学与社会学硕士课程,开始探索马来西亚少数民族不平等的社会现象问题。他最终决定选择以印裔族群为研究对象,以兴权会运动为研究重点,终于在2014年以题为 Kualiti Hidup Komuniti India Bandar Dan Pergerakan Sosial HINDRAF(《印裔族群的生活素质与兴权会运动》)的论文完成了他的硕士课程。现在任职于柔佛新山一所外国经营的高等院校,业余仍然热衷于为争取马来西亚被压迫族群的权益而奋斗。
[ எழுத்தாளர் ]
ஞாம் கீ ஹான் 1983-ல், கோலா திரெங்கானுவில் பிறந்தார். 2007-ல், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற கையோடு; அரசு சார்பற்ற இயக்கங்களில் ஈடுபட்டார். 2009-ல், பொந்தியானில் அமைந்திருக்கும் பெய் சூன் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு டியோங் சீ த்ஷுவோ, தங்கள் பள்ளியின் புறப்பாட நடவடிக்கை துணைத் தலைமையாசிரியராகப் பணியாற்ற அழைப்புவிடுத்தார். சீன மொழி கல்விக்கு சிறிது சேவை செய்யவேண்டும் எனும் ஆவல் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2011-ல், தம் மேற்கல்வியைத் தொடர மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் இணைந்தார். அங்கு மனிதவியல் மற்றும் சமூகவியல் துறையில் படித்துக் கொண்டிருந்த போதுதான், மலேசியாவில் சிறுபாண்மை இனம் சமத்துவமற்ற நிலையில் வாழ்வதை தனது ஆய்வுகள் மூலம் அறிந்துகொண்டார்.
இறுதியில், இந்தியச் சமூகத்தை இலக்காகவும் ஹிண்ராப்ட் இயக்கத்தின் நகர்வுகளை மையமாகவும் வைத்து தனது ஆய்வினை மேற்கொண்டார். 2014-ல், ‘நகர்புற இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரமும் ஹிண்ராப்ட் சமூக இயக்கமும்’ எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து, தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
தற்போது ஞாம் கீ ஹான், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அதேசமயம், மலேசியாவில் ஒடுக்கப்படும் சமூகங்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடிவருகிறார்.
【译者简介】
拉维沙尔玛(Ravi Sarma),1954年出生于印度。他是在新加坡从事民族民主斗争的 P V沙尔玛于1951年被英国殖民地政府驱逐到印度,而在1953年与Sarada Sarma结婚后的第一个孩子。1959 年随父母到北京,居住在北京直到1969年,在北京崇文学校完成小学教育。经历了“中国文化大革命”的开始和一些事件,由于外国人的身份,没有受到冲击。1969年以后移居中国湖南省,一边读书、一边工作,主要从事中文—淡米尔文翻译工作。1982年离开中国,曾参与多种工作,直到1990年又到中国。1991年回到新加坡后,在几家本地公司和一家日本贸易公司工作,一直进行与中国有关的业务。1995年以来担任新加坡人民协会培训师,向非华族人士教授中文对话等课程。现今在广州和新加坡从商,为欧美和亚洲的客户从中国进口各种产品提供服务,同时把中国产品推向许多国家。
[ மொழிப் பெயர்ப்பாளர் ]
ரவி சர்மா 1954-ல், இந்தியாவில், பி.வி.சர்மா சாரதா சர்மா இணையரின் மூத்தப் புதல்வராகப் பிறந்தார். 1951-ல், பிரிட்டிஸ் காலனித்துவ அரசு, சிங்கப்பூரில் தேசிய ஜனநாயகப் போரட்டத்தில் ஈடுபட்டதற்காக, பிவி சர்மாவை இந்தியாவிற்கு நாடு கடத்தியது. 1953-ல் அவர் அங்கு திருமணம் செய்து கொண்டார். 1959-ல் தனது பெற்றோருடன் பெய்ஜிங் சென்ற ரவி சர்மா, 1969 வரை அங்கேயே வாழ்ந்து வந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை, பெய்ஜிங் சொங் வேன் பள்ளியில் தொடங்கி; ‘கலாச்சார புரட்சி’யின் தொடக்கத்தினூடே பயணிக்கத் தொடங்கினார். வெளிநாட்டவர் எனும் முறையில் அவர், எந்தவொரு பாதிப்பையும் எதிர்நோக்கவில்லை. 1969-க்குப் பிறகு, சீனாவின் ஹூனான் பகுதிக்கு அவர் புலம்பெயர்ந்தார். இங்கு வேலை செய்துகொண்டே, தனது படிப்பையும் தொடர்ந்தார். இங்கு அவரின் முகாண்மையான வேலை, மெண்டரிண்-தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். 1982 – 1990-களுக்கிடையே , சீன நாட்டைவிட்டு வெளியேறி; வெவ்வேறு வகையான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1991-ல் சிங்கப்பூர் வந்த இவர், பல உள்ளூர் நிறுவனங்களிலும், சீனாவுடன் வாணிகம் செய்து வந்த, ஜப்பான் நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றினார். 1995 முதல் சிங்கப்பூர் மக்கள் இயக்கத்தில் பயிற்றுநராகவும் இரண்டாவது தொடர்பு மொழியாக மெண்டரின் மொழியைப் போதிப்பவராகவும் பொறுப்பேற்றுள்ளார். தற்போது குஆங் ஷொவ் மற்றும் சிங்கப்பூரில் வாணிகம் செய்துவருகிறார். சீன நாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்யும் ஐரோப்பிய மற்றும் ஆசிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருவதோடு; சீன நாட்டு உற்பத்திப் பொருள்களைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறார்.
5.ஹிண்ட்ராப் இயக்கத்தின் எழுச்சி
2007-ல் நடந்த ஹிண்ராப்ட் பேரணி |
தற்போதைய பரிதாப நிலையிலிருந்து விடுபடுவதற்கும் மலேசிய மண்ணில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கும் அம்னோ ஆளும் கும்பலுக்கு எதிராக ஜீவமரண போராட்டம் நடத்துவதை தவிர, இந்திய இன மக்களுக்கு வேறு வழியே இல்லை.
இதன் காரணமாக மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்துக்கள் அல்லது தமிழ் இன மக்கள் ஹிண்ட்ராபின் பதாகையின் கீழ் ஐக்கியப்பட்டு முன்முயற்சியுடன் நடவடிக்கை எடுக்க தீர்மானித்தனர். 2007-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி இந்தியர்கள் கோலாலம்பூரின் நகர மையத்தில் இன சமத்துவ உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தினார்கள். இந்தப் போராட்டம் முழு உலகத்தின் மக்களுக்கும் பின்வரும் உண்மைகளை எடுத்துக்காட்டின:
1. பிரிட்டிஷ் காலனிஸ ஆட்சி, அம்னோவை தலைமையாக கொண்ட கூட்டணி, பிறகு தேசிய முன்னணி ஆளும் கும்பல் ஆகியவற்றின் 150 ஆண்டுகால அதிகாரத்தின் கீழ் மலேசியாவின் இந்திய இன பொது மக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளனர். பிற்காலத்தில் தோட்டப்புறங்கள் பிரிக்கப்பட்டதினால் அவர்கள் வீடுவாசலையும் வேலையையும் இழந்துவிட்டனர். ஆனால், அவர்களுக்கு தகுந்த மறு ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
2. இதற்கு பிறகு மலேசியா அரசாங்கம் தோட்டத் துறையில் இருந்து தொழில்துறை மயமாக்கத்திற்கு மாறிய போது, தோட்டத் தொழிளாளர்கள் மீண்டும் தோட்டப்புறத்திலிருந்து நகர்ப்புறத்துக்கு குடியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இப்படி அவர்கள் மறுபடியும் வீடுவாசலையும் வேலையையும் இழந்துவிட்டனர். அது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரே ஒரு மன நிம்மதி தந்து வந்த ஏராளம் இந்து கோயில்களும் நாசமாக்கப்பட்டன. இதற்கு ஆளும் கும்பல் கொடுத்த காரணம் “வளர்ச்சி” என்பது மட்டும் தான்.
3. அளவற்ற நிராசை, சங்கடமான அனுபவங்கள் ஆகியவை மலேசிய இந்தியர்களை விழிப்புற வைத்தன. ஆளும் கும்பலின் கேட்பதற்கு இனிமையான பொய்களை அவர்கள் இனிமேலும் நம்ப மறுத்துவிட்டனர்.
வேதமூர்த்தி மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதித்து, 3 த்ரில்லியன் இழப்பீட்டுத் தொகையை பிரிட்டிஸ் அரசாங்கம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வைக்க வழிசெய்யும் பத்திரம். |
அம்னோவை மையமாகக் கொண்ட தேசிய முன்னணி ஆளும் கும்பல் இந்திய இன பொது மக்களின் சட்டப்பூர்வமான நியாயமான நீதியான நடவடிக்கைகளை கொடூரமாக அடக்கி ஒடுக்கியது. ஏனென்றால் உலக மக்களுக்கு மலேசிய இந்தியர்களின் பரிதாப நிலை தெரிந்துவிடுமோ என்பது ஆளும் கும்பலின் அச்சம். போலிஸ் ஹிண்ட்ராபின் கூட்டங்களை தடுத்து நிறுத்த பலவித முயற்சிகளை எடுத்த போதிலும், “ஹிண்ட்ராபுக்கு ஶ்ரீலங்காவின் தமிழ் விடுதலை புலி என்னும் பயங்கரவாத நிறுவனத்துடன் தொடர்புண்டு” என்று குற்றஞ்சாட்டி, இந்திய இனத்தவர்களை பயமுறுத்திய போதிலும், இந்தியர்கள் பயப்படவில்லை! அவர்கள் நாலா பக்கங்களிலிருந்தும் கோலாலம்பூர் நகர மையத்துக்கு முன்னேறி, பிரிட்டிஷ் ஹைக்கமிஷனிடம் மெமோரண்டத்தை கொடுத்தனர்.
மலேசிய போலிஸ் பெரும் தொகை போலிசார்களை அனுப்பி இந்திய பொது மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. அது ரசாயன மருந்து கலந்த உயர் அழுத்த நீர் ஜெட்டால் இந்தியர்களை அடக்கியது. இப்படியெல்லாம் இருந்தும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அடிபணியவில்லை. குறைந்தபட்ச மதிப்பீடு பிரகாரம், அந்நாள் 30,000 மக்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்துக்கு அடுத்து, தேசிய முன்னணி அரசாங்கம் 1960-ன் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் 8(1) பிரிவை காட்டி 2007 டிசம்பர் 13ந்தேதி ஹிண்ட்ராபின் 5 தலைவர்களை கைது செய்தது. இந்த 5 தலைவர்கள் பின்வருமாறு:
பி.உதய குமார், M.மனோகரன், V.கணபதி ராவ், R.கங்காதரன் (இந்நால்வரும் வழக்கறிஞர்கள்), வசந்த குமார் (வணிகர்). 2009, ஏப்ரல் 4ந்தேதி கணபதி ராவும், கங்காதரனும் விடுவிக்கப்பட்டனர்.
தேசிய முன்னணி ஆளும் கும்பல் எல்லாவித முறைகளையும் உபயோகித்த போதிலும் அது இந்திய இன பொதுமக்களின் உணர்ச்சியை தளர்த்த முடியவில்லை. மாறாக அவர்களுடைய மேலும் பெரிய ஆத்திரத்தை மூட்டிவிட்டது. மேலும் அதிகமான ஆதரவாளர்களும், அனுதாபிகளும் ஹிண்ட்ராபின் தலைவர்களுக்கு பக்கபலமாக நின்றனர். ஹிண்ட்ராப் வெகுவேகத்தில் ஒரு பலமான மக்கள் சக்தியாக வளர்ந்தது.
உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஹிண்ராப்ட் இயக்கத்தின் 5 தலைவர்கள். இடமிருந்து ஆர்.கங்காதரன் , கே.வசந்தகுமார், பி.உதயகுமார், எம்.மனோகரன், வி.கணபதி ராவ் |
(குறிப்பு: இஸ்லாமிய கட்சி-பாஸ், ஜனநாயக செயல் கட்சி, மக்கள் நீதி கட்சி ஆகிய மூன்று கட்சிகள் அடங்கிய மக்கள் கூட்டணி அல்லது பாக்காத்தான், 2008-ன் பொது தேர்தலுக்குப்பின் செயற்பட துவங்கியது.)
உண்மைகள் கீழ்வரும் நிலையை காட்டியுள்ளன:
டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் |
(2008 தேசிய பொதுதேர்தல் வரை சோஷலிச கட்சியின் பதிவு அங்கீகரிக்கப்படாததால் அது மக்கள் நீதி கட்சியின் கொடியின் கீழ் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டது.)
5.1 நாடுகடத்தப்பட்ட திரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபின் தொடர்சியான போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
2007-ல் ஹிண்ட்ராப் நடத்திய மாபெரும் கூட்டம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விரிவான கவனத்தை ஈர்த்தது. இது அம்னோவை மையமாகக் கொண்ட தேசிய முன்னணி ஆளும் கும்பலுக்கு ஒரு பிரம்மாண்டமான அடிகொடுத்தது. திரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபின் அதிமுக்கியமான தலைவராக இருந்தார். ஆளும் கும்பல் அதிரடி கைது செய்தல் உட்பட்ட ஒடுக்குமுறைகளை எடுக்கக் கூடும் என்பதை எதிர் பார்த்த திரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபின் பெரும் கூட்டத்துக்குப் பின் மூன்றாவது நாள் அதாவது நவம்பர் 26ந்தேதியன்று மலேசியாவை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றார். அவருடைய நோக்கம் இந்தியர்களின் மனித உரிமைகளையும் மரியாதையையும் பாதுகாக்கும் போராட்டத்தில் ஹிண்ட்ராபுக்கு தொடர்ந்து தலைமை தாங்குவது தான். 2008, ஏப்ரல் 21ந்தேதி திரு வேதமூர்த்தி இங்கிலாந்தை அடைந்த போது “மலேசிய தேசிய முன்னணி அரசாங்கம் அவருடைய சர்வதேசிய பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டது என்று பிரிட்டிஷ் குடிநுழைவு துறை அவருக்கு அறிவிப்புக் கொடுத்தது. அன்று முதல் அவர் வெளிநாட்டில் நாடுகடத்தப்பட்டவரின் வாழ்க்கையை நடத்தி வந்தார். 2012, ஆகஸ்ட் 1ந்தேதி தான் அவர் மீண்டும் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் வழியாக ஜோகூர் பாருவுக்கு திரும்பினார்.
ஐந்து தலைவர்களும் தேசிய முன்னணி அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டதால் ஹிண்ட்ராப் தலைமைத்துவம் இல்லாத ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியது. இச்சமயத்தில் வெளிநாட்டில் இருக்கும் திரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபுக்கு தலைமை தாங்குவதில் முக்கியமான பாத்திரம் வகித்தார். அவர் உலக ரீதியில் மலேசிய இந்தியர்களின் நல உரிமைகளையும் சுய மரியாதையையும் பாதுகாக்கும் போராட்டத்துக்கு ஆதரவை திரட்டினார். திரு வேதமூர்த்தி “மலேசியாவின் சமூக அமைப்பிலுள்ள இன வெறியும் மத விசுவாச சுதந்திரமும்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். உலகெங்கும் கையெழுத்துக்களை திரட்டும் இயக்கத்தையும் அவர் முன் தள்ளினார். மலேசிய அரசாங்கம் அமுல் நடத்தும் சமூக அமைப்பிலுள்ள இன வெறி கொள்கைகளும் அரசியல் சட்டத்திலுள்ள 153-ஆவது பிரிவும் இந்திய இனத்தவர்களுக்கும் மற்ற சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பாகுபாடு, அடக்குமுறை, பரிதாப வாழ்க்கை ஆகியவற்றை விளைவித்ததற்கான ஊற்றுமூலமாகும் என்று அவர் கூர்மையாக சுட்டிக்காட்டினார். எனவே எல்லா இன வெறி கொள்கைகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் எல்லா இனங்களினதும் மத விசுவாச சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் திரு வேதமூர்த்தி மலேசிய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அம்னோ, இன வெறி மேலாதிக்கிய ஆட்சியின் அதி கேந்திர தலைமை கும்பலின் பிரதிநிதி தான். அதனால் அம்னோ ஆளும் கும்பல் எல்லா இன மக்களுடைய பிரதான எதிரியும் கூட. எல்லா இன மக்களும் அரசியல் சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்தி, கூட்டரசு அரசியல் சட்டத்திலுள்ள அசமத்துவ சட்டப்பிரிவுகளை திருத்தவும் ஒழிக்கவும் கோரினால் தான், “மலாய்க்கார்களும் முஸ்லிம்களும் எல்லாரையும் விட மேல்நிலையில் இருக்க வேண்டும்” என்னும் கருத்து எங்கும் பரவுவதை அரசியல் சட்டத்தின் வழியாக முறியடிக்க முடியும் அல்லது இக்கருத்தை ஒழிக்கமுடியும்.
சிறுபான்மை இனத்தவர்கள் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கு அரசியல் சட்டத்துக்கு திருத்தங்கள் கொண்டுவரும் போராட்டம் நடத்துவது அவசியம். வேறுவார்த்தையில், எல்லா இனங்களினதும் சமத்துவ உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவுகளை அரசியல் சட்டத்தில் உட்படுத்த முயற்சி எடுப்பது அவசியம்.
அரசியல் சட்டத்தை திருத்தாமல் “கோட்பாட்டு ரீதியில்” ஏற்றுக்கொள்வது அல்லது “சும்மா சத்தியம் செய்வதின் மூலம் உத்தரவாதம் அளிப்பது” அரசியல் வாதிகளின் வெறும் கண் துடைப்புப் பிரச்சாரம் தான். எல்லா இனங்களினதும் சமத்துவ உரிமைகள் இதனால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும், தொடர்ந்து மிரட்டலை எதிர்நோக்கக்கூடும்.
இன ஒடுக்குமுறை, இன ஒன்றிணைப்பு கொள்கைகளை அமல்படுத்துவதில் அம்னோவும் தேசிய முன்னணி அரசாங்கமும் “கூட்டரசு அரசியல் சட்டத்திலுள்ள” 153-ஆம் பிரிவை அவற்றின் சட்ட பாதுகாப்பாக பயன்படுத்துகின்றன என்று திரு வேதமூர்த்தி சுட்டிக்காட்டினார். அதனால் இந்தப் பிரிவை கூடிய சீக்கிரம் ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபின் சார்பில் கூட்டரசு அரசியல் சட்டத்தின் 153-ம் பிரிவை ஒழிக்க ஆசைப்படும் இந்தியர்களின் தெளிவான நிலைபாட்டை துணிவுடன் பிரகடனம் செய்தார்.
ஆனால் “முற்போக்கு, ஜனநாயகம்” என தம்பட்டம் அடித்த கட்சிகளும் மற்றவர்களும், தேசிய முன்னணியை பதிலியாக்க பாடுபடும் பாக்காத்தானின் பல்வேறு கட்சிகளும் ஹிண்ட்ராபின் சார்பில் திரு வேதமூர்த்தி ளிளக்கிக் கூறிய நீதியான நிலைபாட்டுக்கு ஆதரவளிக்க முன்வர தயங்குகின்றனர். கூட்டரசு அரசியல் சட்டத்தின் 153-ம் பிரிவை ஒழிக்க கோரும் திரு வேதமூர்த்தியும் ஹிண்ட்ராபும் அதீத “தீவிர வாதமாகும்” என்று சிலர் குறைகூறினர். இதற்கு மேலாக வேதமூர்த்தியையும் அவரது கூட்டாளிகளையும் “ஷாவினிஸ வாதிகளாகவும்”, “இன வெறி வாதிகளாகவும்” வருணித்தனர். ஹிண்ட்ராபுக்கும் அம்னோவுக்கும் வித்தியாசம் இல்லை என்பது இவர்களது கருத்து.
1) நம் நாட்டில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அடக்குமுறையும் அசமத்துவமும் இருக்கின்றன என்ற உண்மைகளை அவர்கள் எதிர்நோக்கப் பயப்படுகின்றனர் அல்லது தவிர்த்துக் கொள்ள முயலுகின்றனர்.
2) அம்னோவின் இன வெறி மேலாதிக்கிய ஆட்சியை எதிர்த்து நிற்க அவர்களுக்கு கொஞ்சம் கூட தைரியமும் உறுதிப்பாடும் இல்லை என்பதை அவர்கள் தன்னை தானே வெளிப்படுத்தினர். அம்னோ ஆளும் கும்பல் கிளப்பிய இன வெறி பயமுறுத்தலின் கண்ணியில் இவர்கள் உணர்வுடன் அல்லது தற் செயலாக சிக்கிக்கொண்டனர். இதன் விளைவாக சிறுபான்மை இனங்கள் உட்பட எல்லா இனங்களினதும் சமத்துவ உரிமைகள் முற்றுமுழுதாக அழிந்துவிடக்கூடும்.
வாஸ்தவத்தில் தேசிய வானொலி நிலையம், இணையம், பத்திரிக்கைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்விக் கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அம்னோ ஆளும் கும்பல் பரப்பி வரும் அடிமைத்தனம், ஒன்றிணைப்பு சிந்தனைகளை அவர்கள் தங்களை அறியாமலே ஏற்றுக் கொண்டனர். அதேசமயத்தில் மலேசியா பல இன நாடாகும், எல்லா இனங்களும் சமத்துவ உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படை நிலைபாட்டை அவர்கள் கைவிட்டுவிட்டனர்.
இந்தியர்களின் சுய மரியாதை, சமத்துவ உரிமைகள் ஆகியவற்றுக்கான ஹிண்ட்ராபினதும் இந்திய இன மக்களினதும் போராட்டத்தில் சில நிராசை ஏற்பட்ட போதிலும் இந்தப் போராட்டம் நியாயமான, நீதியான, சட்டப்பூர்வமான நடவடிக்கையாகும்; எல்லா இனங்களும் நடத்தும் சமத்துவ உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். எல்லா இன மக்களும் ஜனநாயக கட்சிகளும் ஜனநாயகத்தை நேசிப்பவர்களும் இந்தப் போராட்டத்தின் மீது அக்கறை காட்டி, அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
5.2 திரு வேத மூர்த்தி நாடு திரும்பி இரண்டாம் கட்டப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
2012, ஆகஸ்ட் 1-ல் நாடு திரும்பிய வேதமூர்த்தி, ஜொகூர்பாரு, மௌன்ட் ஆஸ்தின் கோல்ப் ரிசோர்டில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் இடமிருந்து : வேதமூர்த்தி , கணேசன் , சம்பு லிங்கம் |
பிரிட்டனில் ஹிண்ராப்ட் இயக்கத்தை பிரதிநிதித்த வழக்கறிஞர் சுரேஸ்சுடனும் சஹாபாட் ரக்யாட் செயற்குழுவினருடனும் வேதமூர்த்தி எடுத்துக் கொண்ட படம். |
திரு வேத மூர்த்தி கூறிய முதலாவது கட்டப் போராட்டம் என்பது அவர் வெளிநாட்டில் தங்கியிருந்த காலத்தில் ஹிண்ட்ராபின் சார்பில் நடத்திய பலவித போராட்டங்களை குறிப்பிடுகிறது. இக்காலத்தில் திரு வேத மூர்த்தி தனது “அறிக்கையை” வெளியிட்டார். “அரசியல் சட்டத்தின் 153-ம் பிரிவை” ஒழிக்கக் கோரிய கையொப்பங்கள் திரட்டும் இயக்கத்தை உலகில் உந்தித் தள்ளினார். இவற்றை தவிர, 2012-ம் ஆண்டு ஜுலை 2ந்தேதி, அவர் இங்கிலாந்தின் நீதிமன்றத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தார். 1957-ம் ஆண்டில் மலாயா சுதந்திரம் பெற்ற போது பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய வம்சாவளியை புறக்கணித்து, அம்னோவின் இன வெறி ஆட்சியால் ஆட்டிப்புடைக்கப்பட வைத்தது. இதனால் இந்திய வம்சாவளிக்கு விளைவிக்கப்பட்ட நஷ்டங்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இந்த வழக்கு கோரியது.
“அடக்கி ஒடுக்கப்படும் இனங்களுக்கு மலேசியாவின் சமூக அமைப்பில் இருக்கும் இன வெறி அளவற்ற துன்பங்களை கொண்டு வந்துள்ளது” என்று திரு வேத மூர்த்தி மலேசியாவின் ஏழை இந்திய வம்சாவளியினர்களின் சார்பில் உலகின் பல்வேறு அரசாங்கங்களிடமும் மக்களிடமும் குற்றஞ்சாட்டினார். அதேசமயத்தில் அவர் ஒதுக்கித் தள்ளப்பட்ட இந்தியர்களின் சுய மரியாதையை மீட்டெடுக்க இங்கிலாந்தின் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதற்குப் பின் தாம் நேசிக்கும் தாய்நாட்டுக்கு திரும்பி அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்று சேர்ந்து புதிய ஜனநாயக புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.
சிங்கப்பூரின் குடிநுழைவுத் துறையில் கொஞ்சம் சிக்கல்களை சந்தித்த போதிலும் இறுதியில் திரு வேத மூர்த்தி தனக்கு பாஸ்போர்ட் கிடைத்த பின் சிங்கப்பூர் வழியாக ஜோகூர் பாருவை வந்தடைந்தார். திரு வேத மூர்த்தி பாதுகாப்பாக திரும்பி வந்ததினால், தங்கள் உரிமைகளுக்கும் சுய மரியாதைக்கும் போராடும் இந்தியர்களின் உணர்ச்சி மேலும் உயர்ந்தது.
திரு வேத மூர்த்தி இத்தடவை நாடு திரும்பியதன் நோக்கம் நம் நாட்டில் ஒதுக்கித்தள்ளப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் துன்பங்களை பாரதூரமாக கருத்தில் எடுத்துக்கொள்ள அரசாங்கத்தை (அது தேசிய முன்னணி அரசாங்கமானாலும் சரி, பாக்காத்தான் அரசாங்கமானாலும் சரி) கேட்டுக் கொள்வது தான் என்று திரு வேத மூர்த்தியும் ஹிண்ட்ராபும் தெரிவித்தனர். கஷ்டமான நிலையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள இந்தியர்களுக்கு உதவி செய்யும் திட்டங்களை சீக்கிரம் அமலாக்கவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். திரு வேத மூர்த்தி நாடு திரும்பிய பின் இந்தியர்கள் அதிகமாக வாழும் பல பட்டணங்களை பார்வையிட்டார். அவர் வெளிநாட்டில் இருந்த காலத்தில் நடத்திய நடவடிக்கைகளை பற்றி ஹிண்ட்ராபின் தொண்டர்களிடமும் பொது மக்களிடமும் அறிக்கை செய்தார். மனித உரிமைகளுக்கான இந்தியர்களின் போராட்டத்துக்கு தொடர்ந்து வழிகாட்டவும் அவர் உறுதியளித்தார்.
5.3 தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஹிண்ட்ராப் கொடுத்த மறைமுக ஆதரவு மக்களுக்கு வெறுப்பூட்டியது.
5 ஆண்டுகள் நினைவு நாளை கொண்டாடிய ஹிண்ராப்ட் இயக்கத்திற்கு ஆதரவு தரும் வகையில் சஹாபாட் ரக்யாட் செயற்குழுவினர் கலந்து கொண்டனர். |
(குறிப்பு: இந்த வரைப்படம் 6 அம்சங்களை கொண்டது. 1) முழு நாட்டிலும் சுமார் எட்டு லட்சம் தோட்டத்தொழிலாளர்கள் வீடு வாசலை இழந்து விட்டனர். 2) சுமார் மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் மலேசிய இந்தியர்களுக்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை. 3) கல்வித் துறையில் இந்தியர்களுக்கு போதுமான சமத்துவ வாய்ப்பு கிடைப்பதில்லை. 4) வேலை, வாணிப வாய்ப்புகள் கிடைப்பதில் அசமத்துவம். 5) இந்தியர்களின் மனித உரிமைகளை அத்துமீறிய போலிசார்களை சட்டம் தண்டிப்பதில்லை. 6) மனித உரிமைகளை அமல் நடத்தும் அடையாள குறிக்கள்).
இந்த வரைப்படம் இக்கட்டான நிலையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள ஆசைப்படும் இந்திய வம்சாவளி ஏழை மக்களுக்கு உதவி செய்யும் ஸ்தூலமான நடவடிக்கை திட்டமாகும், அதற்கான வழிகாட்டியுமாகும் என்று ஹிண்ட்ராப் தெரிவித்தது.
ஹிண்ட்ராப் இந்த வரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய முன்னணியுடனும் பாக்காத்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. அதாவது ஹிண்ட்ராபின் வரைப்படத்தில் கையெழுத்துப் போட விரும்பும் கட்சி. அது தேசிய முன்னணியானாலும் சரி, பாக்காத்தான் ஆனாலும் சரி. ஹிண்ட்ராப் 13-வது தேசிய பொது தேர்தலில் அதன் எல்லா பலத்தையும் ஒன்றுதிரட்டி அந்தக் கட்சிக்கு ஆதரவாக நிற்கும் என்று ஹிண்ட்ராப் உறுதியளித்தது. வரைப்படத்தில் கையொப்பமிடும் கட்சிகளுக்கும் அவற்றின் வேட்பாளர்களுக்கும் வாக்கு அளிக்கும்படி அது இந்தியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
“வரைப்படத்தில்” கையொப்பமிட்டால் இந்தியர்களை இக்கட்டான நிலையிலிருந்து விடுவிப்பதற்கான ஸ்தூலமான செயல் திட்டங்களை அமல்நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று ஹிண்ட்ராபின் தலைவர்கள் கருதினார்கள். பொது தேர்தலுக்கு முன் ஹிண்ட்ராப் பாக்காத்தானின் அதியுயர் தலைமைத்துவத்துடன் 24 கூட்டங்கள் நடத்தி, “வரைப்படத்தில்” கையொப்பமிடுவது பற்றி விவாதித்தது என்று ஹிண்ட்ராபின் ஆலோசகர் திரு கணேசன் கூறினார். ஆனால் பாக்காத்தானின் தலைமைத்துவம் கோட்பாட்டு ரீதியில் ஒத்துக் கொள்வதாகக் கூறியதே தவிர, ஹிண்ட்ராபின் “வரைப்படத்தில்” அதிகாரப்பூர்வமாக கையெழுத்துப் போடவில்லை.
இதற்கு மாறாக ஹிண்ட்ராப் அம்னோ தலைவர் திரு நஜிப் ரசாக்குடன் இரண்டு கூட்டங்கள் நடத்திய பின்னரே அதற்கு விளைவு கிடைத்தது. இறுதியில் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 18ந்தேதி, அதாவது வேட்பாளர் நியமன தினத்துக்கு முன்னைய இரண்டு நாட்களில் ஹிண்ட்ராபின் தலைவர்கள் அம்னோவின் தலைவர் திரு நஜிப் ரசாக், தலைமை செயலாளர் தெங்கு அட்னான் ஆகியோருடன் சேர்ந்து கோலாலம்பூரின் பிரிக்பில்ட்சிலுள்ள விவேக்காண்டா தேசிய மாதிரி தமிழ் தொடக்கப் பள்ளியில் ஒரு மெமோரண்டத்தில் கையெழுத்துப் போட்டனர். இந்த மெமோரண்டம் ஹிண்ட்ராபின் “வரைப்படத்திலுள்ள” ஒரு பகுதி பிரேரணைகளை உள்ளடக்கியது. இதற்கு முன், மார்ச் 10ந்தேதி முதல் 31ந்தேதி வரை ஹிண்ட்ராபின் “வரைப்படத்துக்கு” தேசிய முன்னணியும் பாக்காத்தானும் ஆக்ககரமான பதில் அளிக்காமல் இருந்ததை கண்டித்து திரு வேத மூர்த்தி ராவாங்கின் ஒரு இந்து கோயிலில் 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
ஆனால் வருந்த கூடியது என்னவென்றால் ஹிண்ட்ராபின் கேந்திர தலைமைத்துவம் “மெமோரண்டத்தின்” உள்ளடக்கத்தை ஏற்றுக் கொண்டது. இதற்கான காரணம் தற்போதைய முக்கிய கவனத்தை இந்தியர்களின் சமூக பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவதில் செலுத்த வேண்டும் என்று ஹிண்ட்ராப் கருதியது.
13-வது தேசிய பொது தேர்தலில் ஹிண்ட்ராப் தேசிய முன்னணிக்கு பக்கபலமாக நிற்கும் என்று “மெமோரண்டத்தில்” கையொப்பமிட்ட அதேநாளன்று ஹிண்ட்ராப் அறிவிப்பு செய்தது. அதன் எல்லா அடிமட்ட தொண்டர்களும் மலேசியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று, தேசிய முன்னணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி இந்தியர்களுக்கு வேண்டுகோள் விடுக்க தீர்மானித்தது. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இடங்களை திரும்பக் கைப்பற்ற தேசிய முன்னணிக்கு ஹிண்ட்ராப் உதவி செய்தால் இந்தியர்களின் ஏழ்மையை கையாளுவதற்கு பிரதமர் அலுவலகத்தின் கீழ் சிறுபான்மை இன விவகார துறையை நிறுவ முடியும் என்று நஜிப் அறிவித்தார்.
ஹிண்ட்ராபின் அரசியல் நிலைபாட்டில் ஏற்பட்ட இந்தப் பெரிய மாற்றம் பல ஜனநாயக கட்சிகளாலும் மக்களாலும் விமர்சிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டது. குறிப்பாக ஹிண்ட்ராவுக்கு தலைமை தாங்கிய திரு வேத மூர்த்தியை “புதிய சாமிவேலுவாகவும்” “எட்டப்பன” னாகவும் வருணித்தார். “தனது சுய நலனுக்காக இந்தியர்களுக்கு துரோகம் செய்ததாக” அவர்கள் திரு வேத மூர்த்தியை கண்டித்தனர்.
மலேசியாவின் அரசியல் அமைப்பில் இருக்கும் இன வெறி கொள்கைகளும் அரசியல் சட்டத்தின் 153-வது பிரிவும் இந்தியர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்கள், காடாசன் டூசுன், இபான் இனத்தவர்கள் ஆகியோரின் பரிதாப நிலைக்கான மூலகாரணமாகும் என வேத மூர்த்தியும் ஹிண்ட்ராபின் முக்கிய தலைவர்களும் கூறி இருந்தனர். ஆனால் அவர்களுடைய முன்னால் கூறிய செயற்கள் அவர்களது சொந்த நிலைபாட்டையே நிராகரித்துவிட்டன. அவர்கள் ஒரு முக்கியமான உண்மையை மறந்துவிட்டனர். அதாவது மலேசியாவின் அரசியல் அமைப்பிலுள்ள இன வெறி கொள்கைளை அடியோடு திருத்தாமல் ஆளும் கும்பல் கையொப்பமிட்ட வெற்று கடுத்தாசையும் அது கொடுத்த வெற்று வாக்குறுதிகளையும் நம்பினால் அது பொதுமக்களின் கண்களில் மண் தூவுவது போல தான். அது மட்டுமல்ல மக்களை தவறான வழிக்கும் இட்டுச்செல்லும்.
பொது தேர்தலுக்கு முன் அம்னோவின் தலைவர்களுடன் கையெழுத்திடப்பட்ட “மெமோரண்டத்தை” வைத்துக் கொண்டு தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும் படி இந்திய இனத்தவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது வெறும் கனவு தான். மேலும் இது தேர்தல் மூலம் அம்னோ-தேசிய முன்னணியின் ஆட்சியை தூக்கியெறியும் எல்லா இன பொது மக்களினதும் ஆசைக்கு எதிர்மாறானது.
(குறிப்பு: 13-வது தேசிய பொது தேர்தலில் பாக்காத்தானுக்கு 51% வாக்குகளும் தேசிய முன்னணிக்கு 49% வாக்குகளும் கிடைத்த விளைவுகள் தெளிவான அத்தாட்சியாகும்.)
திரு வேத மூர்த்தி, ஹிண்ட்ராபின் முக்கிய தலைவர்கள் ஆகியோரின் செயற்கள் உண்மையில் சொந்த உரிமைகளுக்கும் சொந்த இனத்தின் சுய மரியாதைக்குமான மக்களின் போராட்டத்துக்கு தீங்குகள் விளைவித்ததால் அவர்கள் மக்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டதை புரிந்து கொள்வது கஷ்டமில்லை.
5.4 வேத மூர்த்தி கோபத்துடன் ராஜினாமா செய்து இந்திய இன மக்களின் பக்கத்துக்கு திரும்பினார்.
13-வது தேசிய பொது தேர்தல் காலத்தில் ஹிண்ட்ராபின் நடவடிக்கைகள் கொண்டு வந்த தீங்குகளை குறைவாக மதிப்பிட முடியாது. இவை பாக்காத்தானின் குறிப்பாக மக்கள் நீதி கட்சியின் இந்திய வேட்பாளர்களுக்கு அடிகொடுத்தன. எடுத்துக்காட்டாக தேர்தலில் பேராக்கின் தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட மக்கள் நீதி கட்சியின் திரு K. வசந்த குமாரை பாக்காத்தான் நிறுத்தியது. 2007-ல் திரு வசந்த குமார் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 2009-ல் விடுவிக்கப்பட்ட ஹிண்ட்ராபின் 5 தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் அவர் தேசிய முன்னணி அனுப்பிய ம.இ.காவின் வேட்பாளரும் கட்சியின் துணை தலைவருமான திரு M. சரவணனிடம் 7,927 அதிக வாக்குகளில் தோல்வியடைந்தார். இப்பொழுது திரு M. சரவணன் இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சராக பணிபுரிகிறார்.
இதை தவிர, பேராக்கின் உலுகிந்தா, துவாலாங் செக்கா, சிலாங்கூரின் பாத்தாங் காலி, புக்கிட் மௌவாத்தி ஆகியவை உட்பட மற்ற 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான போட்டியில் மக்கள் நீதி கட்சியின் இந்திய வேட்பாளர்களை பாக்காத்தான் நிறுத்திய போதிலும் அவர்கள் தேசிய முன்னணியின் வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார்கள். இதில் 3 சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணியின் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் 12-வது பொது தேர்தலை காட்டிலும் மிகவும் அதிகம் ஆக இருந்தன. 12-வது பொது தேர்தலில் பாக்காத்தான் வென்ற புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி திரும்பக் கைப்பற்றியது.
பொதுவாக பார்க்கும் போது பாக்காத்தானுக்கு தலைமை தாங்கும் மக்கள் நீதி கட்சிக்கு மிகக் கடுமையான அடி கிடைத்தது. (பாக்காத்தானின் இஸ்லாமிய கட்சியுடனும் ஜனநாயக செயல் கட்சியுடனும் ஒப்பிடும் போது, மக்கள் நீதி கட்சியின் சாதனைகள் தான் ஆக மோசம்.)
(குறிப்பு: நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி கட்சிக்கு 30 இடங்கள், இஸ்லாமிய கட்சிக்கு 21 இடங்கள், ஜனநாயக செயல் கட்சிக்கு 38 இடங்கள் கிடைத்தன. சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி கட்சிக்கு 49 இடங்கள், இஸ்லாமிய கட்சிக்கு 85 இடங்கள், ஜனநாயக செயல் கட்சிக்கு 95 இடங்கள் கிடைத்தன.)
இதற்கான காரணங்களில் ஒன்று மக்கள் நீதி கட்சியின் தலைமைத்துவம் “மலாய்க்கார அரசுரிமை” என்ற சிந்தனையை உண்மையாக கைவிட்டு சொந்த நாட்டின் எல்லா இன மக்களுக்கும் சமத்துவ உரிமைகள் உண்டு என்பதை உறுதிப்படுத்தவில்லை. இன்னொன்று தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும்படி திரு வேத மூர்த்தியும் ஹிண்ட்ராபும் இந்திய வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததும் மக்கள் நீதி கட்சிக்கு பளுவான அடிகொடுத்தது.
பிரதமர் நஜிப்பால் செனட்டராகவும் பிரதமர் துறையில் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட ஹிண்ராப்ட் தலைவர் வேதமூர்த்தி சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது. |
2013, ஜூன் 5ந்தேதி வேத மூர்த்தி செனட்டராகவும் பிரதமர் அலுவலக துணை அமைச்சராகவும் பதவி நியமணம் ஏற்றுக்கொண்டப் பின், அவர் கூறியதாவது, தாம் அரசாங்கத் துறையில் பணிபுரியும் வசதிகளை உபயோகித்து ஹிண்ட்ராபுக்கு தேசிய முன்னணி அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக அமல்படுத்துவதற்கு அவருக்கு 5 ஆண்டுகள் தரும்படி இந்தியர்களை கேட்டுக்கொண்டார். “கட்சி சார்பற்ற” ஹிண்ட்ராப் நிலைபாட்டின் அடிப்படையில் தான் அவர் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டதாக திரு வேத மூர்த்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஆகவே, இதற்கு எந்த அரசியல் கட்சியுடனும் சம்பந்தமில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியர்களை ஏழ்மையிலிருந்தும் ஒதுக்கித்தள்ளப்பட்ட நிலையிலிருந்தும் விடுவித்துக் கொள்வது தான் அவரதும் ஹிண்ட்ராபினதும் ஆசை என்றார். அச்சமயத்தில் திரு வேத மூர்த்தி, அவரது கூட்டாளிகள் ஆகியோரின் செயற்களை திருப்பிப் பார்க்கும் போது ஒருவர் பின்வரும் முடிவுக்கு வரக்கூடும்: ஹிண்ட்ராபின் “வரைப்படத்தின்” ஒரு பகுதி உள்ளடக்கங்களில் நஜிப் கையொப்பமிட்டதினால், ஹிண்ட்ராபின் பிரதிநிதி அமைச்சரவையில் சேர்ந்ததும் ஏழை இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஒரு நம்பிக்கை உண்டு என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இது சுத்த பிரமையாகத்தான் இருந்தது என்பதை பொது தேர்தலுக்குப் பின்னைய உண்மைகள் நிரூபித்துள்ளன.
அதிகாரப் பதவியில் ஏறிய 9 மாதங்களில் திரு வேத மூர்த்தி ஆளும் கும்பலின் தலைவர்களுக்கு முன்னிலையில் தனது எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி வைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். ஏழை இந்தியர்களுக்காகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட மற்ற சிறுபான்மை இனத்தவர்களுக்காகவும் முன்பை போல வாதாட அவருக்கு முடியாமல் போய்விட்டது. இவற்றை எல்லாம் அனுபவித்ததால் திரு வேத மூர்த்தி மிகவும் நிராசைப்பட்டு ஆத்திரமடைந்தார்.
2014, பிப்ரவரி 10ந்தேதி, திரு வேத மூர்த்தி செனட்டர், பிரதமர் அலுவலக துணை அமைச்சர் ஆகிய இரு பதவிகளையும் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். இத்துடன் அவர் இந்திய இன பொதுமக்களின் பக்கத்துக்கே திரும்பி வந்தார். ராஜினாமா செய்த ஒரு வாரத்துக்குப் பின், தாம் ஆசைப்பட்டது போல் இந்தியர்களின் சமூக, பொருளியல் நிலையை மேம்படுத்த முடியாமல் போனதற்காக அவர் இந்திய தேசிய இன பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தமது அறிக்கையில் திரு வேத மூர்த்தி பிரதமர் நஜிப்பை மோசடிக்காரர் என கண்டித்தார். காரணம் தேசிய முன்னணியின் சார்பில் கையொப்பமிட்ட “மெமோரண்டத்திலிலுள்ள” வாக்குறுதிகளை அமல்படுத்த பிரதமர் நஜிப் யோசிக்கவே இல்லை! எப்படியானாலும் இந்தியர்களின் சுய மரியாதைக்காகவும் நல உரிமைகளுக்காகவும் தாம் விடா முயற்சியுடன் போராட உறுதிபூண்டுள்ளதாக திரு வேத மூர்த்தி தெரிவித்தார்.
5.5 சரவாக், சபா மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு ஹிண்ட்ராபின் ஆதரவு.
உண்மையில் திரு வேத மூர்த்தி வெளிநாட்டில் தங்கி இருந்த காலத்தில் மலேசியாவிள் இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடியதோடு, 2010, 2011-ம் ஆண்டுகளில் அவர் சபா, சரவாக்கின் அரசு-சார்பற்ற அமைப்புகளின் தலைவர்களுடன் சேர்ந்து இங்கிலாந்தின் லண்டன், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனநாயக கட்சிகள்- குழுக்களுக்கும் மலேசிய இந்தியர்களும் கிழக்கு மலேசிய மக்களும் அடக்கி ஒடுக்கப்படும் நிலைமையை பற்றி அறிக்கை செய்தார். ஹிண்ட்ராபுக்கும் சபா, சரவாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் இடையிலுள்ள ஒத்துழைப்பு மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது.
2012, ஆகஸ்ட் 14ந்தேதி, ஹிண்ட்ராப், மலேசியா போர்னியோ சங்கட நிலை அற நிதி (Borneo's Plight in Malaysia Foundation-BoPiMaFo/BOPIM, மலேசிய அரசியல் சட்டத்துக்கான இயக்கம் (Constitution for Malaysia Movement-CoMaMo) ஆகியவை கோலாலம்பூரில் மெமோரண்டம் ஒன்றில் கையொப்பமிட்டு அதிகாரப்பூர்வ தந்திரோபாய ஒத்துழைப்பை தொடக்கி வைத்தன. இந்த மெமோரண்டம் 2012, செப்டம்பர் 16ந்தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த மெமோரண்டத்தில் கையொப்பமிட்ட எல்லா அமைப்புகளும் இதில் எழுதப்பட்ட உள்ளடக்கம் பிரகாரம் சபா, சரவாக்கின் சுய நிர்ணயத்துக்கான போராட்டத்துக்கு வெளிப்படையாக பல தடவை ஆதரவு தெரிவித்ததால், சரவாக் முதலமைச்சர் அலுவலகத்தின் கட்டளை பிரகாரம் 2015, ஜனவரி 3ந்தேதி சரவாக் குடிநுழைவுத் துறை சரவாக்கிற்கு வருகை புரிய திரு வேத மூர்த்திக்கு தடைவிதித்தது.
இந்த மெமோரண்டத்தில் எழுதப்பட்ட முக்கிய வேலை “மலேசியாவின் அரசியல் சட்டத்துக்கான இயக்கத்தை” முன்தள்ளுவது தான். ஹிண்ட்ராபும் போர்னியோ சங்கட நிலை அற நிதியும் தான் இந்த இயக்கத்தை தொடக்கி வைத்தன. இதற்குப் பின் சரவாக் மக்கள் ஆசை சங்கமும் (Sarawak Association of People’s Aspiration-SAPA) இந்த இயக்கத்தில் பங்குபற்றியது.
“மலேசிய அரசியல் சட்டத்துக்கான” இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் “1963-ன் மலேசிய உடன்படிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உண்மையான மலேசிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவது தான்.
(குறிப்பு: இன்றைய “மலேசிய அரசியல் சட்டம்” அல்லது “கூட்டரசு அரசியல் சட்டம்”, “மலேசிய கூட்டரசு அரசியல் சட்டத்தின்” முகமூடியில் உருவாக்கப்பட்டது; இதனால் சபா மலேசியாவின் காலனியாக மாற்றப்பட்டது என்று போர்னியோ சங்கட நிலை அற நிதியின் தலைவர் Danniel John Jambun தெரிவித்தார்.) இதை தொடர்ந்து 3 அமைப்புகளும் 1963-ன் மலேசிய உடன்படிக்கையின் கீழ், சபா, சரவாக்கின் சுயாட்சி அந்தஸ்தை மறு சீரமைப்பு செய்வதற்காக கையெழுத்துக்களை திரட்டுவதில் பல இயக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்ய உறுதியளித்தன. அவை ஐக்கிய நாடுகள் சங்கத்திடம் (ஐ.நா.)விடம் சுய நிர்ணய உரிமைக்கான சபா, சரவாக் மக்களின் விருப்பத்தை எடுத்துக்கூற திட்டமிட்டன.
ஹிண்ட்ராபின் கருத்துப் பிரகாரம், அரசியல் அமைப்பிலுள்ள இன வெறி என்பது மலேசிய மக்கள் எதிர்நோக்கும் மிகப் பெரிய அபாயம் ஆகும். இந்த இன வெறியின் ஊற்றுமூலம் “கூட்டரசு அரசியல் சட்டத்தின்” 153-வது பிரிவில் தான் இருக்கிறது. இதே பிரிவு நம் நாட்டின் குடிமக்களை இரண்டுவித தரங்களாக பிரித்தது. ஆகவே, இந்திய இனத்தவர்களும் மற்ற சிறுபான்மை இனத்தவர்களும் இரண்டாம் தர பிரஜைகளாக்கப்பட்டு நீண்டகாலமாக அதி கடுமையான ஒடுக்குமுறையிலும் சுரண்டலிலும் கஷ்டப்படுகிறார்கள்.
பொதுவான நோக்கத்துக்கான போராட்டத்தில் ஹிண்ட்ராப் சபா, சரவாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் ஒன்றுபட்டு ஒத்துழைக்கும் முயற்சி, நாட்டின் சுதந்திரத்தை முன்தள்ளுவதிலும் ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றுக்கான இயக்கத்திலும் நமது நாட்டு மக்களுக்கு ஒரு விசேஷ முன் உதாரணமாக இருக்கிறது. இதனால் ஹிண்ட்ராப், சபா, சரவாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு நம் நாட்டு சிறுபான்மை இனத்தவர்களின் நலன்களிலும் எதிர்காலத்திலும் உண்மை அக்கறை காட்டும் ஜனநாயக கட்சிகள்-குழுக்களும் ஜனநாயக பிரமுகர்களும் தம்மால் முடிந்த அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எல்லாரும் சேர்ந்து மலேசியாவின் இந்தியா, சீன, இபான், காடாசன் டூசமன் முதலிய இனங்கள் உட்பட எல்லா சிறுபான்மை இனங்களையும் ஐக்கியப்படுத்தி, அம்னோவின் இன வெறி ஆதிக்கியத்தை புறக்கணிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் எல்லா சிறுபான்மை இனங்களும் அடக்கி ஒடுக்கப்பட்ட துயரமான நிலையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு கௌரவத்துடன் வாழ முடியும்.
சபா, சரவாக் மலாயா கூட்டரசில் சேர்ந்து மலேசியா உருவாக்கப்பட்ட பின் மலேசிய கூட்டரசு அரசாங்கம் அதாவது அம்னோவும் தேசிய முன்னணி ஆளும் கும்பலும், “1963-ன் மலேசிய உடன்படிக்கையை” புறக்கணித்து, சபா, சரவாக்கை மலேசிய கூட்டரசு அரசாங்க நிர்வாகத்தின் கீழுள்ள காலனிகளாக மாற்றிவிட்டன.
(குறிப்பு: துங்கு அப்துல் ரஹ்மான், சபா, சரவாக் ஆகியவை மலேசியாவின் 12-வது, 13-வது மாநிலங்களாக மாறாது என உத்தரவாதமளித்தார் என்பதை போர்னியோ சங்கட நிலை அற நிதியின் தலைவர் டேனியல் ஜான் ஜம்பூன் (Daniel John Jambun) சுட்டிக்காட்டினார். ஆனால் இன்று சபா மலேசியாவின் ஒரு மாநிலமாகிவிட்டது. ஆரம்பத்தில் புரிந்துகொண்டது போல், சபா மலேசிய கூட்டரசில் சுதந்திரமான சமத்துவ பங்காளி அந்தஸ்துடைய நாடாக இருக்கவில்லை. உண்மையில் மலேசியா இரண்டு கூட்டரசுகளை கொண்டது என்று சபா, சரவாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகளின் தொண்டூழியர்கள் வலியுறுத்தினார்கள். ஒன்று 1948-ம் ஆண்டு ஜனவரி 21ந்தேதி மலாயாவிலுள்ள பல்வேறு ராஜியங்களால் உருவாக்கப்பட்ட மலாயா கூட்டரசு. 1948-ம் ஆண்டு ஜனவரி 31ந்தேதி மலாயா கூட்டரசு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டு, 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 31ந்தேதி சுதந்திரம் அடைந்த பின் அது பலமாக்கப்பட்டது. இன்னொன்று மலேசியா கூட்டரசு. அது 1963-ம் ஆண்டு செப்டம்பர் 16ந்தேதி மலாயா, சபா, சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கிய மேலும் விரிவான புதிய கூட்டரசாக அமைந்தது. இதற்கு முன் 1963-ம் ஆண்டு ஜூலை 22ந்தேதி சரவாக் சுதந்திரம் அடைந்தது. சபா இதே ஆண்டு ஆகஸ்ட் 31ந்தேதி சுதந்திரம் பெற்றது.)
அரை நூற்றாண்டாக அம்னோவும் தேசிய முன்னணியும் சபா, சரவாக்கில் ஆட்சி செலுத்தி, இந்த இரண்டு மாநிலங்களின் வரி வருமானத்தையும் எண்ணெய்-இயற்கை வாயுவையும் முற்றுமுழுதாக கட்டுப்படுத்தியுள்ளன; அவற்றின் இயற்கை வளங்களை சூறையாடியுள்ளன. இதன் விளைவாக சபாவும் சரவாக்கும் மலேசியாவில் சேர்க்கப்பட்ட பின் மிகவும் வறுமைமிக்க மாநிலங்களாக மாறின. இதை தவிர, தேசிய முன்னணி ஆளும் கும்பல் “சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு” அல்லது “வெளி நாட்டு தொழிலாளர்களுக்கு” பெருமளவில் குடியுரிமை பத்திரங்கள் வினியோகித்துள்ளது. இப்படி செய்வதன் மூலம் அவர்களை “தகுதி” பெற்ற வாக்காளர்களாக்கி, தமது ஆளும் அந்தஸ்தை நீடிக்க தேசிய முன்னணிக்கு வாக்கு அளிக்க வைத்துள்ளது. இந்தக் கடுமையாகி வரும் நிலைமை சபா, சரவாக் மக்களுடைய குறிப்பாக பழங்குடி மக்களுடைய அதிருப்தியையும் கவலையையும் கிளப்பியுள்ளது.
சுருக்கமாக கூறினால், சரவாக் மக்களை “1963-ன் மலேசிய உடன்படிக்கை” ஒத்துக் கொண்ட சுதந்திர சுயாட்சி அந்தஸ்துக்கு திரும்பி கொண்டு வருவது தான் ஏழ்மையும் கஷ்டங்களும் நிறைந்த தலைவிதியிலுருந்து விடுதலை பெறுவதற்கான வழி என்பதை கிழக்கு மலேசியாவின் மக்கள் சொந்த அனுபவங்களின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளனர். பிறகு தொடர்ந்து கூட்டரசு அரசாங்கத்தின் காலனியாக இருந்து மிகவும் வறுமையான மாநிலங்களாக மலேசியாவில் இருப்பதா, இல்லையா என்பதை சபா, சரவாக் மக்களே தான் தீர்மானிக்க வேண்டும். சபா, சரவாக்கின் செழுமையான இயற்கை வளங்களை சார்ந்திருந்து சுதந்திரமாக வாழ்ந்து, சபா, சரவாக் மக்கள் தான் சொந்த நாட்டின் வெளியுறவு கொள்கையையும் எதிர்காலத்தையும் பற்றி முடிவு செய்ய வேண்டும்.
(குறிப்பு: போர்னியோ சங்கட நிலை அற நிதியின் தலைவர் டேனியல் ஜான் ஜம்பூன் “ஹிண்ட்ராப் கிழக்கு மலேசியாவின் தொண்டூழியர்களுடன் தந்திரோபாய ரீதியில் ஒத்துழைப்பு பங்காளி உறவை அதிகாரபூர்வமாக அமைத்திருக்கிறது” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். கட்டுரையில் அவர் இப்படி எழுதினார், “…..இத்தடவை சபா, சரவாக்கின் தொண்டூழியர்களுடன் மெமோரண்டத்தில் கையொப்பமிட்டதில் வேறு ரகசிய நோக்கம் ஒன்றுமில்லை என்று திரு வேத மூர்த்தி வலியுறுத்தினார். அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, தமது செழுமையான இயற்கை மூல வளங்களையும் நிலங்களையும் நம்பி சுதந்திரமாக வாழும் போது சபாவும் சரவாக்கும் மேலும் சிறப்பாக வளரும். தற்போதைய நிலைமையில் புத்ரா ஜெயா அமல்படுத்தும் உட்புற காலனிஸ கொள்கைகளின் காரணமாக சபாவும் சரவாக்கும் மலேசியாவில் சேர்க்கப்பட்ட பின் ஏழ்மையான நிலையில் சிக்கியுள்ளன. “ஹிண்ட்ராப் சபா, சரவாக்கில் உயர்ந்த தார்மீக அடிப்படையை கட்டியமைத்துள்ளது என்று திரு வேத மூர்த்தி கூறினார். 1963-ம் ஆண்டில் புருணை புதிய கூட்டரசில் பங்குபெற மறுத்துவிட்டது. 1965-ம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவை விட்டு விலகியது. இந்த நாடுகள் எல்லாம் இப்பொழுது ஆசியானின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருக்கின்றன. இதை பார்த்து சபா, சரவாக்கை சற்று யோசித்துப் பார்க்கலாம். போர்னியோவின் இந்த இரண்டு மாநிலங்கள் மலேசியாவை விட்டுவிலகினால், ஒரு நாள் சபாவும் சரவாக்கும் சிங்கப்பூர் அல்லது புருணை போல உயர்ந்த வளர்ச்சி மட்டத்தை எட்டிப் பிடிக்க முடியும்.” அதேசமயத்தில் சபாவும் சரவாக்கும் மலேசியாவை விட்டுவிலகினால் இது தீபகற்ப மலேசியாவின் ஆட்சியை முட்டிமோதக்கூடும்; அதனால் உள்நாட்டின் இன பாகுபாடு, இன ஒடுக்குமுறை போன்ற கூர்மையான பிரச்சனைகளை உணர்வுபூர்வமாகவும் விவேகமாகவும் கையாள மலேசியாவின் ஆளும் கும்பல் நிர்ப்பந்திக்கப்படும் என்ற அடிப்படை கருத்தில் ஹிண்ட்ரபின் தந்திரோபாயங்கள் அமைந்திருக்கின்றன. போர்னியோவின் இரண்டு மாநிலங்கள் மலேசியாவை விட்டு விலகினால் புத்ரா ஜெயா ஆளுனர்களின் அரசியல், பொருளாதார அளவை பலவீனப்படுத்தும். இது ஹிண்ட்ராபுக்கு சாதகமானது என்று அது ஒப்புக்கொண்டது.)
ஹிண்ட்ராப் கிழக்கு மலேசியாவின் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் தந்திரோபாய ரீதியில் ஒத்துழைப்பு உறவுகளை ஸ்தாபித்த போது திரு வேத மூர்த்தி கூறிய கருத்துக்கள் பிரகாரம் சபாவும் சரவாக்கும் மலேசியாவை விட்டுப் போனால் தான் இந்த இரு மாநிலங்களினதும் மக்களுடைய அடிப்படை நலன்களுக்கு பொருத்தமானது. அப்பொழுது தான் சபா, சரவாக் மக்கள் தற்போதைய வறுமையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியும் என்று அவர் கருதினார். இப்படியென்றால் அம்னோ-தேசிய முன்னணி ஆளும் கும்பலுக்குத் தான் மிகப் பெரிய அடி கிடைக்கும். உள்நாட்டின் இன பாகுபாடு, இன ஒடுக்குமுறை உருவாக்கிய கடுமையான விளைவுகள் மீது கவனம் செலுத்த அம்னோ – தேசிய முன்னணி ஆளும் கும்பலை இது நிர்ப்பந்திக்கும்.
இது கண்டிப்பாக மலேசியாவின் ஜனநாயக மனித உரிமை இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமானது. ஆனால் சபா, சரவாக்கின் சிறுபான்மை இனங்களினதும் பழங்குடி மக்களினதும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறிக்கொள்ளும் “ஜனநாயக கட்சிகள், குழுக்கள்” அல்லது “ஜனநாயக பிரமுகர்கள்” சபா, சரவாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகள், ஹிண்ட்ராப் ஆகியவை முன் தள்ளிவரும் “மலேசிய அரசியல் சட்டத்திற்கான” இயக்கத்துக்கும் அதன் பிரச்சாரத்துக்கும் ஆதரவளிக்கவில்லை. அவர்கள் சபா, சரவாக் மக்களுடைய அடிப்படை நலன்களை கருத்தில் கொள்ளவும் இல்லை. இதற்கு மாறாக அவர்கள் அம்னோ – தேசிய முன்னணியை பின்பற்றி அவற்றை போலவே சபா, சரவாக்கில் இருந்து கிடைக்கும் நன்மைகளை முரட்டுத்தனமாக தன் பிடியில் வைத்துக்கொள்ளும் மனோபாவத்தை மேற்கொள்கிறார்கள். இது மக்களுக்கிடையில் நிராசையையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது.
தொகுப்பு
ஹிண்ட்ராபின் போராட்டம் இந்திய இன மக்களுக்கு எதிராக பிரிட்டிஷ் காலனிஸம் இழைத்த சரித்திர குற்றங்களை கண்டனம் செய்ததுடன் ஆரம்பித்தது. அது அம்னோ – தேசிய முன்னணியின் புதிய காலனிஸ ஆட்சிக்கு எதிரான போராட்டமாக வளர்ந்துள்ளது. இவையெல்லாம் மலேசியாவின் இடதுசாரி கட்சிகளும் அமைப்புகளும் பொதுமக்களும் நடத்தும் தேசிய ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் தொடர்ச்சி ஆகும். இந்த இயக்கம் முன்பு பூர்த்தி செய்யப்பட முடியாமல் போன சரித்திரக் கடமைகளையும் தொடர்ந்து கையேற்று நடத்துகிறது. ஆகவே ஹிண்ட்ராபின் போராட்டம் மலேசியாவின் தேசிய ஜனநாயக இயக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது என்று கூறலாம். இது தற்போதைய கட்டத்தில் மலேசியாவின் இந்திய பொது மக்கள் ஜனநாயக சீர்திருத்த இயக்கத்துக்காக பாடுபடுவதின் தவிர்க்கப்பட முடியாத ஒரு விளைவும் ஆகும்.
1) 19-ம் நூற்றாண்டின் 40-ம் 50-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் காலனிஸ அரசாங்கம் மலாயாவில் ஆட்சி புரிய தொடங்கியது. சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து அது பெருமளவில் மலிவான உடல் உழைப்பு தொழிலாளர்களை கொண்டு வந்தது. இவர்கள் தான், மலாயா சுதந்திரம் அடைந்த பின் மூன்று முக்கிய இனங்களான மலாய், சீன, இந்திய தேசிய இனங்களாக உருவெடுத்தன. பிரிட்டிஷ் காலனிஸ அரசாங்கம் அவர்களை ஈவிரக்கமின்றி அடிமைப்படுத்தி சுரண்டியது. அவர்களுடைய ஜீவமரணத்தையும் பொருட்படுத்தவில்லை. இடதுசாரி கட்சிகளின் வழிகாட்டலில் மூன்று இனங்களின் உழைப்பாளி மக்களும் பிரிட்டிஷ் காலனிஸ வாதிகளுக்கு எதிராகவும் மலாயா பிறகு மலேசியாவிலுள்ள காலனிஸ வாதிகளின் கையாட்களுக்கு எதிராகவும் விடாபிடியாக போராடினார்கள்.
பிரிட்டிஷ் காலனிஸ ஆட்சி காலத்தில் கொடுமையான ஆதிக்கம், அடிமைப்படுத்துதல் ஆகியவற்றை அனுபவித்த மலேசிய இந்திய இன மக்கள் துயரங்கள் மிகுந்த நிலைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள இடதுசாரி கட்சிகள் அமைப்புகளின் உதவியை நாடினார்கள். ஆனால் அவர்களுடைய ஆசை நிராசையாகியது.
2) மலாயாவின் எல்லா இனங்களும் குறிப்பாக மலாய், சீன, இந்திய இன மக்கள் சுதந்திரத்துக்காக போராடிய காலத்தில் இந்தியர்கள் உட்பட பெரும்பானமை தொழிலாளர்களும் இடதுசாரிகளும் பெரும் கூட்டணிகளின் கீழ், அதாவது “அகில மலயா கூட்டு நடவடிக்கை கவுன்சில் (AMCJA), மலாய் மக்களின் கூட்டு முன்னணி (PUTERA) ஆகியவற்றின் கீழ் ஐக்கியப்பட்டனர். அவர்கள் கருத்து வித்தியாசங்களை ஒதுக்கி வைத்து எல்லா இன மக்களினதும் அடிப்படை நலன்களுக்கு இசைவான “மக்களின் அரசியல் சட்டத்தை” நகல் தீட்டினார்கள்.
ஆனால் இடதுசாரிகளின் இந்தப் பெரும் கூட்டணி நடத்திய போராட்டம் பிரிட்டிஷ் காலனிஸ அரசாங்கம், மலாய் இன பிரபுக்கள் அதாவது பல்வேறு ராஜியங்களின் சுல்தான்கள், மலாய் இன பிரமுகர்கள் (Elites) அதாவது அம்னோ ஆகிய மூன்று தரப்புகளைக் கொண்ட சக்தியை எதிர்த்து நிற்க முடியவில்லை. இறுதியில் பிரிட்டிஷ் காலனிஸ நலன்களை பாதிக்காத அடிப்படையிலும் மலாய் பிரபுக்களினதும், பிரமுகர்களினதும் நலன்களுக்கு சலுகை கொடுக்கும் அடிப்படையிலும் ஆளும் கும்பல் “மலாயா கூட்டரசு அரசியல் சட்டத்தை” உருவாக்கியது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமிய மதத்துக்கும் மலாய்க்காரர்களின் விசேஷ உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் அம்சங்கள் உள்ளடக்கி இருந்தன். இது தான் அப்பொழுதைய மலாயாவிலும் பிறகு மலேசியாவிலும் ஆட்சி புரிவதற்கு அவர்களுக்கு பலமான கருவியாக அமைந்தது. முன்னைய கூட்டணி அரசாங்கம், இன்றைய தேசிய முன்னணி அரசாங்கம் ஆகியவற்றின் ஆட்சியில் ம.இ.கா. ஆளும் கும்பல் பக்கம் சாய்ந்ததினால் இங்கு வாழும் இந்திய இன பொது மக்கள் சமத்துவமாக நடத்தப்படவே இல்லை. மலாயா சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகளாகியும் இன சமத்துவ அந்தஸ்து பெறுவதற்கான இந்தியர்களின் கனவு அப்படியே நசுக்கப்பட்டது.
3) 20-ம் நூற்றாண்டின் 60-ம் ஆண்டுகளின் இறுதியில் இருந்து இப்பொழுது வரை, அம்னோவை மையமாகக் கொண்ட தேசிய முன்னணி ஆளும் கும்பல் மலேசியாவை முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்ற பல முயற்சிகள் எடுத்துவந்துள்ளது. அது நாட்டின் 40% மலாய்க்காரர் அல்லாத இனங்களின் சமத்துவ உரிமைகளை கடுமையாக பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் மலாய்க்காரர் அல்லாத இனஙகள் தப்பித்துக் கொள்ள முடியாத பரிதாப நிலையில் படிப்படியாக சிக்கி இருக்கின்றனர். பல்லாண்டுகள் கழிந்து இந்திய இன மக்கள் போராட்ட நடைமுறையில் இருந்து விழிப்புணர்வு பெற்றனர். அம்னோ-தேசிய முன்னணி ஆளும் கும்பலின் அமைப்பிலுள்ள இன வெறி, பாகுபாட்டுக் கொள்கைகளும் அரசியல் சட்டத்திலுள்ள 153-ம் பிரிவும் தான் தங்கள் கஷ்டங்களுக்கான ஊற்றுமூலம் என்பதை இந்தியர்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.
இந்தியர்களின் மனதில் நெடுங்காலமாக அடக்கி வைத்து இருந்த அதிருப்தி 2007-ம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் ஆர்ப்பாட்டத்தில் எரிமலை போல் வெடித்தது. மலேசியாவில் அமுல் நடத்தப்படும் இன வெறி கொள்கைகள், மத விசுவாச பாகுபாட்டுக் கொள்கைகள் ஆகியவை ஹிண்ட்ராப் வெகுவேகமாக பலமாகி வருவதற்கு சமூக அஸ்திவாரமிட்டன.
எனவே, ஹிண்ட்ராபின் போராட்டம் இன சமத்துவம், மத விசுவாச சுதந்திரம் ஆகியவற்றுக்கான நீதியான போராட்டமாகும். “கூட்டரசு அரசியல் சட்டத்திலுள்ள” 153-ம் பிரிவை ஒழிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராப் தைரியமாக கேட்டுக் கொண்டது.
“பாக்காத்தானிலுள்ள” 3 பிரதான கட்சிகளும் “இடதுசாரி” என்று கூறிக்கொள்ளும் சில கட்சிகளும் அமைப்புகளும் அம்னோ ஆளும் கும்பலின் இன வெறி, சமய மிரட்டலை எதிர்த்து நிற்க பயப்படுகின்றன. அவை இன, சமய ஒடுக்குமுறை பற்றிய உண்மையான பிரச்சனைகளை தொட்டுப் பேசுவதையே தவிர்க்கின்றன. நாம் “கூட்டரசு அரசியல் சட்டத்திலுள்ள” 153-ம் பிரிவை ஒழிக்க கேட்டுக்கொள்ளும் ஹிண்ட்ராபின் நிலைபாட்டுக்கும் பிரேரணைகளுக்கும் மதிப்புக் கொடுப்பது அவசியம்.
4) இந்திய இன மக்களின் சமத்துவ உரிமை, சுய மரியாதை ஆகியவற்றுக்காக மட்டும் பாடுபடும் அமைப்பாக இருந்த ஹிண்ட்ராப், சபா, சரவாக் மக்களின் சுய-நிர்ணயத்துக்கான போராட்டத்திலும் கவனம் செலுத்தும் அமைப்பாக வளர்ந்துள்ளது. அதன் போராட்டத்தின் தந்திரோபாயங்கள் முன்னைய மலாயாவின் இடதுசாரி இயக்கத்தின் போராட்ட தந்திரோபாயங்களுடன் ஒத்திருக்கின்றன என்பதை இது காட்டுகிறது. அப்போது மலாயாவின் இடதுசாரி இயக்கம் சிங்கப்பூர்-மலாயாவுடன் மறு ஒன்றிணைப்புக்கு வாதாடியதை தவிர, வட போர்னியோவின் மூன்று மாநிலங்களின் மக்களே மலேசியாவில் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. (குறிப்பு: வட போர்னியோ என்பது சபா, சரவாக், புருணை ஆகியவற்றை குறிப்பிடுகிறது. கடைசி நிமிடத்தில் புருணை மலேசியாவில் பங்கு பெறவில்லை. ஹிண்ட்ராப் அந்தக் காலத்தில் மலாயாவின் இடதுசாரி இயக்கம் முன்தள்ளிய தேசிய ஜனநாயக இயக்கத்தின் நோக்கங்களை நோக்கி முன்னேறுகிறது என்பதை ஹிண்ட்ராபின் போராட்டம் காட்டுகிறது.)
இன்றுவரை அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. தங்கள் சொந்த நடைமுறையின் மூலம் சபா, சரவாக் மக்கள் பின்வரும் உண்மைகளை உணர்ந்து கொண்டுள்ளனர்: “மலேசிய கூட்டரசு”, இடதுசாரிகளின் காலனிஸ எதிர்ப்பு இயக்கத்தை குறிப்பாக சிங்கப்பூரின் இடதுசாரி சக்திகளின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும் தமது ஆளும் அந்தஸ்தை பலப்படுத்துவதற்காகவும் பிரிட்டிஷ் ஆளும் கும்பல் துங்கு அப்துல் ரஹ்மான் ஆளும் கும்பலுடனும் (இதற்கு மேலாக லீ குவான் யூ ஆளும் கும்பலுடனும்) சேர்ந்து உருவாக்கிய அரசியல் ஒழுங்கு ஆகும். மலேசியா உருவாக்கப்பட்டதன் விளைவாக சபாவும் சரவாக்கும் அம்னோ-தேசிய முன்னணியின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநிலங்களாகின. தீபகற்பத்தில் வாழும் இந்தியர்களை போல் சபா, சரவாக் மக்களும் வறுமையிலும் தொலை தூரத்திலும் தள்ளிவிடப்பட்டனர். இப்பொழுது சபா, சரவாக் மக்கள் “சுதந்திர போர்னியோ பெற வேண்டும்”, “மலேசியா கூட்டரசில் இருப்பதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் “ஆகிய அரசியல் கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர். ஹிண்ட்ராப் சபா, சரவாக் மக்களுடைய இந்த அரசியல் இயக்கத்துக்கு ஆதரவு வழங்கி பெரும் அக்கறையும் காட்டுகிறது; அவர்களுடன் தந்திரோபாய ரீதியில் ஒத்துழைப்பு உறவுகளையும் கட்டி அமைத்திருக்கிறது.
ஒரே மாதிரி மிகக் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்ட இந்தியர்களும் சபா, சரவாக் மக்களுக்கும் இடையிலுள்ள அரசியல் கூட்டணி பலமாகி விரிவுபடும் போது அம்னோ-தேசிய முன்னணி மேலாதிக்கியமும் மலேசிய கூட்டரசும் அழிந்துவிடும் நாள் வரக்கூடும் என்பதை எதிர்பார்க்கலாம். ஆகவே நம் நாட்டின் அரசியல் எதிர்காலத்தில் அக்கறையுள்ள கட்சிகள், அமைப்புகள் ஆகியவையும் தனிநபர்களும் இன கௌரவத்தை பாதுகாத்து நல உரிமைகளுக்கான இந்திய இனத்தவர்களின் போராட்டத்துக்கும் சபா, சரவாக் மக்களின் சுய-நிர்ணயத்துக்கான போராட்டத்துக்கும் ஆதரவு அளிப்பது தான் நீதியானது.
சுருக்கமாகச் சொன்னால் நாட்டின் எல்லா இன மக்களும் ஜனநாயக கட்சிகள், அமைப்புகள், மத விசுவாச அமைப்புகள் ஆகியவையும் ஜனநாயக பிரமுகர்களும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் வளர்ச்சி மீது அதிக கவனம் செலுத்துவது அவசியம். மேலும் ஹிண்ட்ராபுடன் ஒத்துழைப்பு உறவை அமைத்துக்கொள்வதும் அவசியம். இப்படி செய்வதன் மூலம் மூன்று பெரிய அரசியல் கட்சிகளை மட்டும் கொண்ட “பாக்காத்தானை” காட்டிலும் வித்தியாசமான ஜனநாயக ஐக்கிய முன்னணியை நிறுவ முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்த ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கீழ் எல்லா இனங்களும் வேறுபட்ட வர்க்கங்கள் சமூகத் தட்டுகளும் வேறுபட்ட மத விசுவாசங்களை பின்பற்றும் மக்களும் ஒன்றுபட்டு போராடி, அம்னோ-தேசிய முன்னணியின் இன வெறி மேலாதிக்கியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எல்லா இன மக்களையும் ஜனநாயகம், விமோசனம், சமத்துவ உரிமைகள் ஆகியவை அனுபவிக்க வைக்கவும் நம் நாட்டின் ஜனநாயக, மனித உரிமை இயக்கத்தை தவறற்ற பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும்.
(2015, ஜனவரி 1 ந்தேதி எழுதப்பட்டது, ஜனவரி 18 ந்தேதி முதல் திருத்தம் செய்யப்பட்டது.)
0 comments:
Post a Comment